Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுஷ்மா ஸ்வராஜ் கணவர் காலமானார்

புதுடெல்லி: மிசோராம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஸ்வராஜ் கவுஷல்(73). இவருக்கு நேற்று மதியம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மறைந்த ஸ்வராஜ் கவுஷல், மறைந்த முன்னாள் வௌியுறவுத்துறை அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவராவார். இவர்களின் மகள் பன்சூரி ஸ்வராஜ் புதுடெல்லி தொகுதியின் பாஜ மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “ஸ்வராஜ் கவுஷலின் மறைவால் வேதனை அடைந்துள்ளேன். அவர் ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக தனது வழக்கறிஞர் தொழிலை பயன்படுத்தினார். இந்தியாவின் இளைய ஆளுநராக இருந்த ஸ்வராஜ் கவுஷலின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.