நெல்லை: நெல்லையில் கவின் ஆணவ கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தையிடம் 4 மணி நேரமாக எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறார். சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான எஸ்.ஐ. சரவணனிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு யாரேனும் சதி திட்டம் தீட்டி தந்தார்களா?, முன்கூட்டியே திட்டமிட்ட கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு யாருக்கேனும் கொலையில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement