புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நாளை காலை பதவி ஏற்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் ஜனாதிபதி முர்மு, அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ள சூர்யா காந்த், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுமார் 14 மாதங்களுக்கு மேல் இந்தப் பதவியை வகிப்பார். பூடான், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் குடும்பத்தினருடன் இவ்விழாவில் பங்கேற்க இந்தியா வருகை தந்துள்ளனர்.
+
Advertisement


