புதுடெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் தமிழ்நாடு உடற்கல்வி இயல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்ததற்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த இரு வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் ஹரிஷ் குமார் நேற்று தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அமர்வில் ஒரு முறையீட்டை முன் வைத்தார் இதை அடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கை நாளை விசாரிப்பதாக உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள இரண்டு மனுக்களும் நாளை(இன்று) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
+
Advertisement