உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி பதிவுத்துறையில் அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையில் மாவட்ட பதிவாளர்கள் 30 பேருக்கு உதவித் தலைவர்களாக பதவி உயர்வு வழங்குவதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலுமாக அவமதிக்கப்பட்டுள்ளது. இதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஐவருக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் உதவி ஐ.ஜி. பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. உதவி ஐஜி பணிக்கான பதவி உயர்வு பட்டியல் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும். ஒருங்கிணைந்த பணிமூப்புப் பட்டியலை பதிவுத்துறை உடனடியாக வெளியிட வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பதிவுத்துறை உதவி தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
