புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி தனது காலணியை வீசினார். பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவாய் நேற்று முதல் முறையாக பேசி உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின் போது கருத்து தெரிவித்த அவர், ‘‘திங்கட்கிழமை நடந்த சம்பவத்தை பார்த்து நானும் எனது சக நீதிபதி சந்திரனும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களுக்கு இது மறக்க வேண்டிய சம்பவம்’’ என்றார்.
+
Advertisement