புதுடெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானி, தனது மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் கணக்குகளை மோசடி என வகைப்படுத்திய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) முடிவை உறுதி செய்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு எஸ்பிஐ தனது கடன் விதிமுறைகளை மீறும் பரிவர்த்தனைகளில் நுழைந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, அனில் அம்பானியின் கணக்குகளை மோசடி என வகைப்படுத்தியது. மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அனில் அம்பானியின் வீடு தொடர்பான வளாகங்களில் சோதனை நடத்திய சிபிஐயிடமும் எஸ்பிஐ வங்கி புகார் தெரிவித்தது. அனில் அம்பானியால் ரூ.2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக எஸ்பிஐ புகார் கூறியதைத் தொடர்ந்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement

