புதுடெல்லி: பண்டிகை மற்றும் விழா காலங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் பயணிக்க விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. இது குறித்து சமூக செயல்பாட்டாளர் லட்சுமி நாராயணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். அதில் விமான நிறுவனங்கள் திடீர் திடீரென கட்டணங்களை உயர்த்துவது கட்டுப்பாடற்ற வெளிப்படைதன்மையில்லாத சுரண்டல்.
இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பதால் விமான கட்டணங்களை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அபபோது மத்திய அரசு மனு மீது நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


