உச்ச நீதிமன்றம் குறித்த காலக்கெடுவுக்குள் தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும்: பார்கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் வளியுறுத்தல்
சென்னை: உயர் நீதிமன்றத்தில் பார்கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் 2 ஆண்டாக நடத்தப்படாமல் உள்ளது. 2026 ஏப்ரல் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது பார்கவுன்சில் தேர்தலை நடத்தி முடிக்காமல் தள்ளி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதற்காக வழக்கறிஞராக பணியாற்றி வருவதற்காக உறுதி சான்றை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும், தமிழ்நாடு பார்கவுன்சில் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. எனவே, அந்த சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக தேர்தலை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஓய்வுப்பெற்ற நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் தற்போதைய பார்கவுன்சில் நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வழக்கு தொடப்படும் என்றார்.


