Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மசோதா தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாசித்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்ட மனு மீது தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்தூர்கர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வாசிக்கிறது.

மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மசோதாக்கள் மீது 3 மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என ஆளுநர், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக 5 நீதிபதிகள் |கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது

ஆளுநர் நீண்டகாலம் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் சட்டப்பேரவைக்கு ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும். நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் அதை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஒரு சட்டப்பிரிவுக்கு 2 வகையான விளக்கம் அளிக்கும் நிலை இருந்தால் எது சுமுக நிலை இருந்தால் அதையே பின்பற்ற வேண்டும்.

ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதாவை ஆய்வுசெய்ய |நிறுத்தி வைப்பது அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புவதுதான். அதன்படி மசோதாவை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஆளுநருக்கு உள்ள அதிகாரம் குறித்த கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதில் அளித்துள்ளது. .

பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியல் சட்டம் சில தனி உரிமைகளை ஆளுநருக்கு வழங்கியுள்ளது. காரணம் எதுவும் கூறாமல் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்பலாம் அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பலாம்.

3ல் ஒன்றை தேர்தெடுப்பதுதான் ஆளுநருக்கான தனிப்பட்ட அதிகாரம். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசும் அமைச்சரவையுமே முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும். ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக்கூடாது. உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் கொடுத்ததாக கருதப்படும் என்று சொல்வது அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் அதிகாரம்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. ஒன்றிய அரசு கூறுவதுபோல் ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் 4வது வாய்ப்பு இல்லை. ஆளுநர் செயல்படாமல் இருந்தால் அரசியல் அமைப்பு, நீதிமன்றங்கள் அதனை ஆய்வு செய்யும். ஆளுநர்களுக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரையறை நிர்ணயிக்க முடியாது.

ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. மசோதாக்களில் உள்ள அம்சங்களை பார்க்காமல் ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை மட்டுமே விதிக்க முடியும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே அளித்த தீர்ப்பில் உறுதியாக இருக்கிறோம்.