நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் : உச்சநீதிமன்றம்
டெல்லி :நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், தெரு நாய்களை பிடிக்க 8 வாரம் கால அவகாசம் கொடுத்துள்ளது.