டெல்லி : கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
+
Advertisement