டெல்லி: அளிப்பதாக தெரிவித்துள்ளது. போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக, ஆபாத் ஹர்ஷ்த் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கற்பழிப்பு குறித்த சட்டங்கள், அவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி அளிக்க அனைத்து கல்வி நிறுவனங்களையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
பாலியல் சமத்துவம், பெண்கள், சிறுமிகளுக்கான உரிமைகள், அவர்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமை ஆகியவை பற்றி விழிப்புணர்வை உறுதிசெய்ய பண்பு பயிற்சி சேர்க்கப்பட வேண்டும். சிறுவர்களின் மனநிலையை மாற்றும் நடவடிக்கைகள், பள்ளிக்கூட நிலையில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். கற்பழிப்பு குற்றம், அதற்கான தண்டனை, போக்சோ சட்டம் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘வளர் இளம் பருவத்தினர் இடையே சம்மதத்துடன் நடைபெறும் உறவில் போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. போக்சோ சட்டப் பிரிவுகள் குறித்து சிறுவர், ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது’’ என்று தெரிவித்தனர்.
