Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ் 2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேளாண்மை பல்கலையில் சேர துணை கலந்தாய்வு: ஆக.20 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை பிரிவிற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், பிளஸ்-2 துணை தேர்வின் மூலம் தேர்வானவர்கள் பல்கலைக்கழகங்களின் இளமறிவியல் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, வேளாண் பல்கலையின் துணை கலந்தாய்வுக்கு வரும் 20ம் தேதி வரை http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பல்கலைக்கழகத்தின் பொது விண்ணப்பத்தினை இடைநிறுத்திய மற்றும் சமர்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தரவரிசை பட்டியலில் இடம்பெற்று, ஆனால் கலந்தாய்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் விண்ணப்பிக்க கூடாது. பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த துணை கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு என தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

துணை கலந்தாய்விற்கு மாணவர்கள் ஏதாவது தவறான தகவல்களை வழங்கினாலோ, அல்லது விதிமுறைகளை மீறினாலோ, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும், இணையதளம் மூலம் இளமறிவியல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வரும் 20-ம் தேதி கடைசி நாளாகும்.

இது தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 98657-03537 மற்றும் 94420-29913 என்ற எண்ணிலும், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 94886-35077, 94864-25076 என்ற எண்களிலும், ugadmissions@tnau.ac.in என்ற இமெயில் முகவரி மூலமாகவும் வாரநாட்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.