Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேலிடத்துக்கு ரிப்போர்ட் அடித்ததால் ஷாக் ஆகியிருக்கும் மலராத கட்சியின் மாஜி போலீஸ்கார தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புதுப்புது ரூல்ஸ் போட்டு வேலை செய்யாம இருக்கும் பெண் அதிகாரியால் மான்செஸ்டர் சிட்டி போலீசார் பரிதவிக்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘போலீஸ்காரங்க அவசர தேவைக்கும், குழந்தைங்களோட ஸ்கூல் பீஸ், திருமண செலவு, மெடிக்கல் செலவுக்கும், எமர்ஜென்ஸி பண தேவைக்காகவும் போலீஸ் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் செயல்பட்டு வருது.. ஆனா மான்செஸ்டர் சிட்டியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரியோட செயல்பாடு சங்கத்தின் நோக்கத்தையே சிதைச்சிட்டு வருதாம்..

அதிகாரியோட அலட்சியத்தால் பல போலீஸ்காரங்க தங்களோட குழந்தைகளின் ஸ்கூல், காலேஜ் பீஸ் கட்ட முடியாம அவதிப்பட்டு வர்றாங்களாம்.. எமர்ஜென்சிக்கு கடன் தேவை என்று விண்ணப்பம் செய்தால் மாசக்கணக்கில் விண்ணப்பத்தை கிடப்பில் போட்டுட்டு பெண் அதிகாரி ஜாலியாக இருக்கிறாராம்.. அதிலும் சென்னையை தலைமையிடமாக கொண்டு வேலை செய்யுற போலீஸ் விண்ணப்பம் செய்தால், அவர்களை சென்னைக்கு அனுப்பி அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் இல்லைன்னு என்ஓசி வாங்கி வரச்சொல்றாராம்..

இப்படி புதுசுபுதுசா ரூல்ஸ்களை போட்டும், தட்டிக்கழிக்கிறதுக்கு காரணத்தை கண்டுபிடிச்சிட்டு விண்ணப்பங்களை கிடப்பில் போடுறதால கடன் வாங்க முடியாம மான்செஸ்டர் போலீஸ்காரங்க பரிதவிச்சிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அல்வாவுக்கே அல்வா கொடுக்கிறாராமே இலைக்கட்சி தலைவரு..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரர் பதவி பறிபோய் பலமாதங்கள் ஆன நிலையில் இன்னும் ரொம்பவே அப்செட்டாகத்தான் இருக்காராம்.. முதல்வர் கனவில் இருந்த தன்னை ஒழித்தது இலைக்கட்சி தலைவர்தான் என்பதால் கொந்தளிப்பாகத்தான் இருக்காராம்..

பழிக்கு பழி வாங்கியே தீருவேன் என்ற சபதமும் செஞ்சிட்டதா கட்சிக்காரங்க சொல்லிக்கிட்டிருக்காங்க.. அதோடு அவரது கட்சியின் தலைவரான அல்வாகாரர் ஒரு அமைதிப்படையாக செயல்பட்டுக்கிட்டிருக்காராம்.. போலீஸ்காரர் கட்சியை உச்சத்துக்கு கொண்டு போயிட்டேன் என டெல்லியை நம்ப வைத்திருந்த நிலையில், அல்வாக்காரரின் ரிப்போர்ட்டை பார்த்து ஷாக்காயிட்டாங்களாம்.. பூத் கமிட்டி கண்டறியும் குழு ஒன்றை வைத்து ஆய்வு செஞ்சாராம் அல்வாக்காரர்.. அதில் டெல்லிக்கு போலீஸ்காரர் அனுப்பிய ரிப்போர்ட் அனைத்தும் போலியாத்தான் இருந்ததாம்..

அவரது நடவடிக்கை எல்லாம் வாயாலே வடைசுடும் கதையாகத்தான் இருந்ததாம்.. இதனை தெரிஞ்சிக்கிட்ட மாஜி போலீஸ்காரர் ஆய்வுக்கு வராம தப்பிட்டாராம்.. அதே நேரத்தில் எல்லோரையும் மிரட்டுவதற்கு தனக்கென ஒரு விசிடிங் கார்டு வேண்டும் என்பதில் போலீஸ்காரர் ரொம்பவே ஆர்வமாக இருக்காராம்.. அதோடு ஆகஸ்ட் மாதம் தேசிய தலைவர் தேர்வு நடக்குதாம்.. அந்த பட்டியலிலாவது விசிடிங் கார்டு வேண்டும் என்பதற்காக டெல்லியை மிரட்டத்தான் ஆகஸ்ட் மாதம் பேசுவேன் என்றதாக அவரது எதிரணியினர் சொல்றாங்க..

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, இலைக்கட்சி தலைவரை மிரட்டுவதற்கு தான் அவ்வாறு கூறியதாக விவரமறிந்த ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க.. தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தால் கூட்டணி ஆட்சிதான் என உள்துறை மந்திரி அடிச்சி சொல்றாரு.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ அதிமுக தனித்து ஆட்சியை அமைக்கும் என்கிறார். இவ்வாறு சொல்லி டெல்லிக்கே டப் கொடுப்பதை தடுக்கத்தான் ஆகஸ்ட் மாதம் பேசுவேன் என சொன்னதா அவரது அடிப்பொடிகள் சொல்றாங்க.. ஆனால் அல்வாவுக்கே அல்வா கொடுக்கும் தைரியம் இலைக்கட்சி தலைவருக்கு மட்டும் தான் இருக்குதாம்..

தனித்து ஆட்சி என கட்சிக்காரர்களை ஒரு பக்கம் ஏமாற்றினாலும், ஆட்சியை பிடிக்க முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியுமாம்.. தலைக்குமேல் கத்தி தொங்கும் நிலையில் மலராத கட்சியோடு கூட்டணி வச்சிக்கிட்டு, தேர்தலை சந்தித்து, எதிர்கட்சி தலைவராகி விட்டால் போதும் என்ற எண்ணத்தில் தான் இருக்காராம்.. இதன் மூலம் மலராத கட்சியோட கூட்டணி வச்சது போலவும் ஆச்சுது, அவர்களின் நெருக்கடியில் இருந்து தப்பித்தும் விடலாம் என்பதால் எதற்கும் கவலைப்படாமல் இருப்பதாக இலைக்கட்சி தலைவரின் அடிப்பொடிகள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி மா.செ. மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்ட பிறகும் பதவி வேணும்னா என்னிடம் வாங்கன்னு பயங்கர ஆட்டம் போடுகிறாராமே உதவியாளர்..’’ எனக்கேட்டர் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் மேற்கு பகுதியில் இலை கட்சியில் மா.செ.வாக இருந்த ‘கோல்டு’ செயல்பாடு இல்லை என்று அண்மையில் மாற்றப்பட்டார். அவரிடம் உதவியாளராக இருந்தவர், தற்போது அவரிடம் இருந்து விலகி விட்டாராம்..

ஆனால் அவருடன் இருந்தபோது உள்ள மேலிட தொடர்புகளை வைத்து இலை கட்சியில் பதவி வேண்டுமா, என்னிடம் வாருங்கள், எனக்கு மேலிடத்தில் உள்ளவர்களை தெரியும் என்று கூறி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளாராம்.. தேர்தல் வரும் நேரத்தில் பதவியும் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்று எண்ணி பலரும் அவருடன் தொடர்பை ஏற்படுத்தி வருகிறார்களாம்..

மா.செ மாற்றப்பட்ட பின்னரும் அவரது உதவியாளருக்கு இவ்வளவு பவரா இது மேலிடத்திற்கு தெரியுமா, யார் ஆதரவுடன் அவர் இதனை செய்கிறார் என்பது இலை கட்சியில் இப்போது விவாதப்பொருளாக மாறியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பணத்தை எதிர்பார்க்காமல் அனைவரும் கட்சி வேலை செய்யணும் என தடாலடி காட்டினாராமே இலைக்கட்சி மாஜி அமைச்சர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘லிங்கசாமியின் ெபயர் கொண்ட நதி மாவட்ட இலைக்கட்சியின் சார்பில் சேலத்துக்காரரின் சுற்றுப்பயணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்துச்சாம்.. அதில் மாஜி மீசைக்காரர் பேசும்போது, ‘பூத் கமிட்டி அமைக்க சொன்னால் பணம் கேட்கிறாங்க.. பதவியில் இருப்பவர்களிடம் கட்சி வேலை பற்றி பேச்சு எடுத்தால்... பதவியே வேண்டாம் என்று ஓடுறாங்க.. பணம் கொடுத்தால்தான் வேலை பார்ப்போம் என்ற மனநிலையில் நம் கட்சியினர் இருக்காங்க.. பணத்தை எதிர்பார்க்காமல் அனைவரும் கட்சி வேலை பார்க்க வேண்டும்’ என தடாலடியாக சொன்னாராம்..

இவரது பேச்சை கேட்டு மனம் வெறுத்துப் போன கட்சியினர், ‘ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது சம்பாதித்து, சேர்த்து வைத்த பணத்தை கொஞ்சமாவது எடுத்து எங்க கண்ணுல காட்டலாம்ல? பணமே இல்லாமல் எப்படி இந்த காலத்தில் வேலை பார்க்க முடியும்..’ என்று அவர் காதில் கேட்கும் அளவிற்கு முணுமுணுத்து விட்டார்களாம்.. இதைக் கேட்ட மேடையில் இருந்த மாநில நிர்வாகி ஒருவர், ‘அதெல்லாம் வரவேண்டிய நேரத்துல வரும். யாரும் கவலைப்பட வேண்டாம்..’ என ஆறதலாய் கூறி அப்போதைக்கு மேட்டரை முடித்தாராம்..’’ என்றார் விக்கியானந்தா.