மும்பை: 2026ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் தொடர்வார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். அந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி இறுதி போட்டி வரை முன்னேறியது. அதை தொடர்ந்து 2025ம் ஆண்டும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் செயல்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்படுவார் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்வாகம் அறிவித்துள்ளது.
+
Advertisement


