அடுத்த ஆண்டு மே மாதம் முதல் கோடை மழை, வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு: ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: கோடை கால பருவத்தில் பயிர் செய்யும் விவசாயிகளின் பயிர்கள் வனவிலங்குகளால் பாதிக்கப்படுகிறது. மேலும் திடீரென பெய்யும் மழையாலும் பெருத்த சேதம் அடைகிறது. இதற்கு இழப்பீடு கோரி பலதரப்பினர் ஒன்றிய அரசை வலியுறுத்தினர்.
இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு மே மாதம் முதல் காரீப் பருவத்தில் இருந்து வனவிலங்கு தாக்குதல்களால் ஏற்படும் பயிர் இழப்புகள் பசல் பீமா யோஜனாவின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு நேற்று அறிவித்துள்ளது. மேலும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் ஏற்படும் இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீட்டு செயலியைப் பயன்படுத்தி புகைப்படங்களுக்கு மனு செய்ய வேண்டும்.


