புதுடெல்லி: மலேசியாவில் நடைபெறும் சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் பட்டியலை, ஹாக்கி இந்தியா நேற்று வெளியிட்டது. மலேசியாவில் சுல்தான் ஆப் ஜோகர் ஜூனியர் ஹாக்கிப் போட்டிகள் வரும் அக்டோபர் 11 முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்திய ஹாக்கி அணி, வரும் அக்டோபர் 11ம் தேதி நடக்கும் போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியுடன் மோதவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 18 வீரர்கள் பட்டியலை ஹாக்கி இந்தியா நேற்று வெளியிட்டது. இந்திய அணிக்கு ரோகித் கேப்டனாக செயல்படுவார். கோல்கீப்பர்களாக, பிக்ரம்ஜித் சிங், பிரின்ஸ்தீப் சிங் விளையாடுவர்.
தடுப்பாட்டக்கார்களாக ரோகித், தலெம் பிரியோபர்தா, அன்மோல் எக்கா, அமிர் அலி, சுனில் பி.பி. ரவ்நீத் சிங் ஆகியோர் செயல்படுவர். நடுகள வீரர்களாக அன்கிட் பால் தவுனவோஜம் இங்கலெம்பா லுவாங், அத்ரோகித் எக்கா, அரைஜீத் சிங், ரோசன் குஜார், மன்மீத் சிங் இருப்பார்கள். முன்கள வீரர்களாக அர்ஷ்தீப் சிங், சவுரப் ஆனந்த் குஷ்வாகா, அஜீத் யாதவ், குர்ஜோத் சிங் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, உபரி வீரரகளாக வீவேக் லக்ரா, ஷர்தானந்த் திவாரி, தோக்கோம் கிங்சன் சிங், ரோகித் கல்லு, தில்ராஜ் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.