கோவை: வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 23ம் தேதி சோதனையை தொடங்கினர். நேற்று 3வது நாளாக சோதனை நடந்தது. இதே போல உடுமலைப்பேட்டை நேரு வீதியில் உள்ள மண்டல அலுவலகம் மற்றும் வரதராஜபுரம், கணபதிபாளையம் ஆகிய பகுதியில் உள்ள கோழி தீவன உற்பத்தி ஆலைகளிலும் 3வது நாளாக சோதனை நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள கோழிப்பண்ணை அதிபர் வாங்கிலி சுப்பிரமணியம் வீடு மற்றும் அலுவலகத்திலும் நேற்று 3வது நாளாக சோதனை நடந்தது.
+
Advertisement