கெய்ரோ: சூடானில் மசூதி மீது துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் பலியானார்கள். சூடானில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரலில் ராணுவத்துக்கும், ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரப்போட்டி தொடங்கியது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே சண்டை நடந்து வருகின்றது. இந்நிலையில் ஆர்எஸ்எப் எனப்படும் துணை ராணுவமானது வடக்கு டார்பூரின் தலைநகரான எல்பாஷர் நகரில் உள்ள மசூதி மீது நேற்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.
அதிகாலை டிரோன் மூலமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 43 பேர் பலியாகி உள்ளனர். வயதானவர்கள், குழந்தைகள் உட்பட மசூதியில் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டிரோன் தாக்குதல் குறித்த முழு விவரங்கள் தெரியவில்லை. கடந்த வாரம் எல்பாஷரில் ஆர்எஸ்எப் மற்றும் ராணுவம் கடுமையாக மோதிக்கொண்டதால் நடந்த தொடர்ச்சியான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.