சென்னை: ஊரகப்பகுதி மாணவர்களுக்காக கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு படிப்பு உதவித்தொகை வழங்க ரூ.1 கோடியே 44 லட்சம் நிதியை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. ஊரகப்பகுதி மாணவ, மாணவியர்களுக்காக கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வழங்கும் வகையில் 2025-26ம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நிதியில் இருந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களின்படி, செங்கல்பட்டு மாவட்டம் ரூ.3 லட்சத்து 43 ஆயிரம், திருவள்ளூர் ரூ.3 லட்சத்து 31 ஆயிரம், காஞ்சிபுரம் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம், மாவட்டங்கள் உள்பட 37 மாவட்டங்களுக்கும் ரூ.1 கோடியே 19 லட்சத்து 65 ஆயிரம் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement