திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரியாணி அரிசி நிறுவனத்தின் விளம்பர தூதராக உள்ளார். இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம் சார்பில் நுகர்வோர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் குறிப்பிட்டிருந்த விவரங்கள் வருமாறு: கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனத்தின் பிரியாணி அரிசியை வாங்கினேன். அந்த விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்ட பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே இந்த அரிசி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர தூதரான நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த நுகர்வோர் ஆணையம் டிசம்பர் 3ம் தேதி அரிசி நிறுவனத்தின் உரிமையாளர், நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
+
Advertisement
