சென்னை: சார்-பதிவாளர் அலுவலகங்களில் முகூர்த்த தினமான ஆக.28, 29ல் அதிக பத்திரப் பதிவு நடக்கும் என்பதால் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பதிவுத்துறை ஆணையிட்டுள்ளது. ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யவும், 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்குப் பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யவும், அதிகளவில் பத்திரப் பதிவு நடக்கும் அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யவும், 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
+
Advertisement