துபாய்: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில், இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழந்த பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அஸம், ஸ்டம்புகளின் மீது பேட்டால் ஓங்கி அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் அப்போட்டியின்போது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிகளை மீறியதற்காக, பாபர் அஸமிற்கு, போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தவிர, தகுதிக்குறைப்பு புள்ளி ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதத்தில் பாபர், கிரிக்கெட் ஆட்டத்தில் இழைக்கும் முதல் குற்றம் இது.


