Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்றார் வறுமையில் தவித்த மாணவியின் உயர்கல்விக்கு கமல்ஹாசன் உதவி

சென்னை: வறுமையால் படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்ற மாணவி உயர்கல்வியை தொடர கமல்ஹாசன் உதவியுள்ளார்.  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகிலுள்ள தெற்குவாடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர், மாணவி ஷோபனா. இவரது தந்தை மீன்பிடி கூலி தொழிலாளி. தாய், நண்டு ஏற்றுமதி நிறுவனத்தில் தினக்கூலியாக பணியாற்றுபவர். வறுமையான குடும்ப சூழ்நிலைக்கு மத்தியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஷோபனா, 562 மதிப்பெண்கள் பெற்று, தான் படித்த அரசு பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்வானார்.

ஏதாவது ஒரு கல்லூரியில் பட்டம் பயின்ற பிறகு குடிமைப்பணி தேர்வு எழுத வேண்டும் என்பது தனது ஆசை என்று ஷோபனா தெரிவித்திருந்தார். ஆனால் கடன் சுமையால் குடும்பம் அவதிப்படுவதால், உயர்கல்வியை தொடரும் சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்து, ஒரு ஆடையகத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.

இந்நிலையில், ஷோபனாவை பற்றிய தகவலை சமூக வலைத்தளங்களின் மூலம் அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், உடனே மாணவி ஷோபனாவை சென்னைக்கு வரவழைத்து, தனது கமல் பண்பாட்டு மையம் சார்பில் ஷோபனா உயர்கல்வியை தொடரவும், அவரது லட்சியமான குடிமைப்பணி தேர்வுக்கான ஆயத்தங்களை செய்வதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

இந்த சந்திப்பில் மநீம பொதுச்செயலாளர் ஆ.அருணாசலம், ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு மாநில செயலாளர் முரளி அப்பாஸ், மாணவர் அணி மாநில செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் உடனிருந்தனர். மாணவியை அழைத்து வந்து கமல்ஹாசனை சந்திக்க வைக்கும் நிகழ்ச்சியை, பாம்பனை சேர்ந்த கடலோசை சமுதாய ஒளிபரப்பு நிலைய தலைவர் காயத்ரி உஸ்மான், லெனின் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.