*உடற்பயிற்சி அளிக்க கலெக்டர் அறிவுரை
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் முதியோர் இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் தளவாய்பாளையம் டி.என்.நகர். காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோர் இல்லம் மற்றும் கல்லுக்குளம் பூக்காரத்தெரு புனித வின்சென்ட் தே பவுல் சபை ஓசானாம் முதியோர் இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் தளவாய் பாளையம் டி.என்.நகர் காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோர் இல்லம் மற்றும் கல்லுக்குளம் பூக்காரத்தெரு புனித வின்சென்ட் தே பவுல் சபை ஓசானாம் முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள முதியோர்களுடன் மாவட்ட கலெக்டர் நேரில் கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.
மேலும், முதியோர் இல்லங்களின் சமையலறை, தங்கும் அறை, வரவேற்பறை, வருகைப் பதிவேடு, முதியோர்களுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் அலுவலர்களிடமிருந்து தகவல் பெற்று அவற்றை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
முதியோர்கள் எத்தனை நபர்கள் தங்கியிருக்கின்றனர் என்பது குறித்தும், அவர்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் உணவுப் பட்டியல் குறித்து, மேலும் வயதான மற்றும் நோயாளி முதியோருக்குக் கிடைக்கும் தொடர்ச்சியான சிகிச்சை முறைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் காப்பாளர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், அங்கு தங்கி உள்ள முதியோர்களின் உடல்நிலையை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு சிறிய சிறிய உடற்பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் முதியோர்களுக்கு புதிய தன்னம்பிக்கை உருவாகும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.