திருச்சி மாணவி உயிரிழப்பு வழக்கு : திருச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12ம் வகுப்பு மாணவி மர்மமரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்து தலைமை ஆசிரியர் கொலை செய்ததாக மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மாணவி தாய் தொடர்ந்த வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. பதில் அளிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது.