Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டி..!!

கோவை: மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டி அளித்து வருகிறார். கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் கல்லூரி மாணவி ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில்,

பேசிய காவல் ஆணையர்,

மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். துடியலூர் அருகே பதுங்கியிருந்த 3 பேரையும் பிடிக்க தனிப்படைபோலீசார் முயன்றபோது போலீசாரை அரிவாளால் தாக்கினர். 11.20க்கு 100க்கு உதவி கேட்டு அழைப்பு வந்தது, 11.35க்கு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.

துப்பாக்கிசூடு ஏன்? - காவல் ஆணையர் விளக்கம்

போலீசார் காலில் சுட்டதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர். 3 பேரும் சேர்ந்து தாக்கியதில் காவலர் சந்திரசேகருக்கு இடது கையில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துடியலூரில் பதுங்கியிருந்த 3 பேரும் சேர்ந்து தாக்கியதில் காவலர் சந்திரசேகருக்கு இடது கையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட 3 பேரும் கோவை இருகூரில் தங்கியுள்ளனர்.

300 சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன:

தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது குணா (எ) தவசி(30), சதீஷ் (எ) கருப்பசாமி(20), கார்த்திக் (எ) காளீஸ்வரன் (21) ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். சிசிடிவி வீடியோ பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டோம். கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருடியதும் விசாரணையில் அம்பலமானது. 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து 3 குற்றவாளிகளை அடையாளம் கண்டோம். கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் கார்த்தி சகோதரர்கள், குணா உறவினர் ஆவார். சதீஷ், குணா ஆகியோருக்கு இரண்டு காலிலும் குண்டு பாய்ந்துள்ளது; கார்த்தி என்பவருக்கு ஒரு காலில் குண்டு பாய்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை:

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேரும் மது அருந்திவிட்டு குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என என காவல் ஆணையர் தெரிவித்தார்.

3 பேர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன:

கைதான 3 பேர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. வாகனத் திருட்டு மற்றும் கொலை வழக்குகள் 3 பேர் மீதும் நிலுவையில் உள்ளன. கைதுசெய்யப்பட்ட 3 பேரும் கோவை இருகூரில் தங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீது 4, 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவசர கால உதவிக்கு காவலன் செயலி

புகார் வந்த உடனேயே காவல்துறை சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். தமிழ்நாடு அரசின் காவல் உதவி செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசர நேரத்தில் போன் செய்ய இயலாவிட்டாலும் செல்போனை 3 முறை குலுக்கினாலே அவசர அழைப்பு சென்றுவிடும். சம்பவம் நடந்த இடத்தில் அன்றிரவு 100 போலீசார்களை வைத்து குற்றவாளிகளை தேடினோம் என தெரிவித்தார்.