கும்பகோணம்: கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் சுற்றித்திரியும் நாய்கள் கடித்து 6 மாணவிகள் காயம் அடைந்துள்ளனர். தெருக்களில் நாய் பிரச்னை அதிகரித்துவரும் நிலையில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கிறது. கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் 4,500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.100க்கு மேற்பட்ட பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் மாணவிகள் வகுப்பறைக்கு செல்லும் வழியில் நடைபாதை அமைக்காததால் கல்லூரி மைதானம் வழியாக வகுப்பறைகளுக்கு சென்று வருகின்றனர்.
மழை காலங்களின் போது மைதான முழுவதும் சேரும் சகதியுமாக மாரி வருவதாக குற்றம் சட்டியுள்ளன. அதுமட்டும் இல்லாமல் கல்லூரி வளாகம் முழுவதும் சுற்றித்திரியும் நாய்களால் மாணவிகளும், பேராசிரியர்களும் கடும் அச்சத்துடனே கல்லூரிக்கு வளம்வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு 6 மாணவிகள் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். நாய்கடித்து தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் என்னோடு சேர்த்து 6 மாணவிகள் நாய் கடித்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது கல்லூரி வளாகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என எம்.பி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தற்போது மாணவிகளை நலன் கருதி பேராசிரியர்கள் உதவியுடன் தங்களுடைய சொந்த பணத்தில் நடைபாதை உள்ளிட்ட சின்ன சின்ன சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளோம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை எத்தனை முறை விரட்டி அடித்தாலும் எதாவது ஒரு வழியில் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தனர். நாடு முழுவதும் தெரு நாய் பிரச்னை குறித்தான விவாதம் எழுந்து வரும் நிலையில் கல்லூரி வளாகத்தில் 6 பேரை நாய்கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.