Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள் நிறைந்த மேற்கு வங்கம்: 2023-24ல் தெலுங்கானாவில் 436 பள்ளிகளில் மாணவர்கள் இல்லை

டெல்லி: இந்தியாவில் இன்னும் சுமார் 8,000 பள்ளிக்கூடங்கள் மாணவர் சேர்க்கையே நடைபெறாமல் இயங்கி வருவது கல்வியாளர்களை பெரும் கவலை அடையவைத்துள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில், நாட்டின் கடந்த 2023-24 கல்வி ஆண்டில் மொத்தம் 7,993 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது தெரிந்துள்ளது. அதே நேரம் பள்ளிகளில் 20,217 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஒரு மாணவர் கூட படிக்காத பள்ளிகளில் நிறைந்த மாநில பட்டியலில் மேற்கு வங்கம் முதல் இடம் விதிக்கிறது. அங்கு 3,812 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. இந்த பள்ளிகளில் அதிகபட்சமாக 11,965 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2,240 பள்ளிகளுடன் தெலுங்கானா இரண்டாம் இடத்திலும், 463 பள்ளிகளுடன் மத்திய பிரதேசம் மூன்றாம் இடத்தில உள்ளது. தமிழ்நாட்டிலும் 11 பள்ளிகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேரவில்லை.

அதே நேரம் மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் ஹரியானா, மஹாசாஸ்தா, கோவா, ஹாம், ஹிமாச்சல பிரதேசம், சதீஸ்கர் மாநிலங்களில் இல்லை. புதுச்சேரி, லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசத்திலும் இது போன்ற பள்ளிகள் இல்லை என்பது ஆறுதலான விஷயங்கள் ஆகும். கடந்த 2023-24ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 12,954 க்கு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையே நடைபெறவில்லை.