டெல்லி: தொல்லை தரும் இடங்களில் பிடிக்கப்பட்ட தெரு நாய்களை அங்கேயே விடக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து தங்குமிடத்தை மாற்றவேண்டும். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து நாய்கள் காப்பகத்தில் அடைக்க வேண்டும். அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்களில் தெருநாய்கள் நுழைய முடியாத அளவுக்கு வேலிகள் அமைக்க வேண்டும். தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில் 2 வாரங்களுக்குள் தெருநாய்களை கண்டறிந்து அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement

