தெருநாய் வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தெருநாய் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் வரும் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எவ்வளவு தீவிரமான பிரச்னை என்று தெரியாதா? கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தும், இதுவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தெருநாய் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகியவை மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
