மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்கு சந்தை குறியீட்டு எண்கள் 0.64% குறைந்து முடிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 519 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 83,459 புள்ளிகளானது. இன்று பங்குச் சந்தை சரிவு: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர கட்டணங்களால் தூண்டப்பட்ட உலகளாவிய வர்த்தகப் போரின் தாக்கம் குறித்த பெருகிவரும் அச்சங்களுக்கு மத்தியில், முக்கிய உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட போக்குகளை பிரதிபலிக்கும் வகையில், இந்திய பங்குச் சந்தை பாரிய இழப்புகளைச் சந்தித்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. டைட்டன், பார்த்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், எம்&எம், எஸ்.பி.ஐ., ஆகிய பங்குகள் விலை உயர்ந்தன. பவர்கிரிட்(3%), எட்டர்னல்(2,8%), டிஎம்பிவி(2,5%) டாடா ஸ்டீல்(1.8%) உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. வணிகவரித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, பல வங்கிகளின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகியது.
