Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாநிலங்களின் சம்பளம், ஓய்வூதியம், வட்டி செலவு 10 ஆண்டில் 2.5 மடங்கு அதிகரிப்பு: சிஏஜி அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: கடந்த 2022-23ம் ஆண்டுக்கான மாநிலங்களின் நிதி குறித்து இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2013-14 முதல் 2022-23 வரையிலான 10 ஆண்டு காலத்தில் மாநிலங்களின் வருவாய் செலவினம் மொத்த செலவினத்தில் 80-87 சதவீதமாக இருந்தது. மேலும் ஒருங்கிணைந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி)13-15 சதவீதமாக இருந்தது.

2022-23 நிதியாண்டில், வருவாய் செலவினம் மொத்த செலவினத்தில் 84.73 சதவீதமாகவும், ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.85 சதவீதமாகவும் இருந்தது. 2022-23ம் நிதியாண்டில், மொத்த வருவாய் செலவினமான ரூ.35,95,736 கோடியில், உறுதியளிக்கப்பட்ட செலவு ரூ.15,63,649 கோடி,மானியங்களுக்கு ரூ.3,09,625 கோடி மற்றும் மானிய உதவிக்கு ரூ.11,26,486 கோடி.

2013-14 நிதியாண்டில் அனைத்து மாநிலங்களுக்கும் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதலுக்கான ஒதுக்கப்பட்ட செலவு ரூ.6,26,849 கோடியாக இருந்தது. இது 2022-23 நிதியாண்டில் ரூ.15,63,649 கோடியாக உயர்ந்தது.2013-14 ம் ஆண்டில் அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.96,479 கோடியாக இருந்த மானியத்திற்கான செலவு 2022-23 ம் ஆண்டில் மாநிலங்களுக்கு இது ரூ.3,09,625 கோடியாக உயர்ந்தது.

2013-14 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், வருவாய் செலவினம் 2.66 மடங்கும், உறுதியளிக்கப்பட்ட செலவினம் 2.49 மடங்கும், மானியம் 3.21 மடங்கும் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.