Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உள்ளாட்சித் தேர்தலுக்காக சிவபோஜன் திட்டத்தை மீண்டும் தொடங்க மாநில அரசு முடிவு: ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு

மும்பை: மகாவிகாஸ் அகாடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மலிவு விலை உணவு திட்டமான சிவபோஜன் திட்டத்தை, மீண்டும் தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் இத்திட்டத்திற்காக அரசு ரூ.21 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட சில கவர்ச்சிகரமான திட்டங்களால், மகாராஷ்டிர அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

மாநிலத்திற்கு முதலீடுகள் அதிகமாக இருந்தாலும், செலவுகள் அதிகரித்திருப்பதால் நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான முந்தைய மகாயுதி அரசாங்கம், 2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பல திட்டங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கும் லட்கி பகின் திட்டம் மாநில அரசுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.

லட்கி பகின் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாக வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாநிலத்தில் சுமார் 2.5 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்திற்காக மட்டும் மாதந்தோறும் ரூ.3,600 கோடி நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால் பிற திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்ட அரசு, லட்கி பகின் திட்டத்தில் தகுதிபெறாத லட்சக் கணக்கான பயனாளிகளை நீக்கியது.

அதே போல, வெறும் 10 ரூபாய்க்கு சத்தான மதிய உணவு வழங்கும் சிவபோஜன் திட்டத்தை அரசு ரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏழை மக்களுக்கு 10 ரூபாயில் சத்தான மதிய உணவு வழங்கும் சிவபோஜன் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 10 ரூபாய்க்கு 2 சப்பாத்தி, சாப்பாடு, காய்கறிகள் மற்றும் பருப்பு குழம்பு வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் ரூ.5க்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர் ரூ.10 ஆக உயர்த்தப்பட்டது. கொரோனா காலக்கட்டத்தில் அரசு இலவசமாகவே உணவு வழங்கியது. அதன் பிறகு மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள 1,904 சிவபோஜன் திட்ட மையங்களில் தினசரி 2 லட்சம் பேர் பசியாறுகிறார்கள்.

இந்த திட்டத்திற்காக அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.14 கோடி செலவு செய்கிறது. முந்தைய ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்திலும் இத்திட்டம் தொடர்ந்த நிலையில், நிதி நெருக்கடியின் காரணமாக இத்திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்ததாக தகவல்கள் கசிந்தன. நிதி நெருக்கடியால் கடந்த 8 மாதங்களாக இத்திட்டத்தை மேற்கொள்ளும் பிரதிநிதிகளுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. துணை முதல்வர் அஜித்பவார் பட்ஜெட் தாக்கல் செய்த போதும், இந்த திட்டத்தை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனவே மாநில அரசு, அமைதியாக இத்திட்டத்தை நிறுத்தி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் திட்டம் நிறுத்தப்படாது என நிதியமைச்சரும் துணை முதல்வருமான அஜித்பவார் உறுதியளித்திருந்தார். ‘சிவபோஜன் திட்டத்தை நிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. தொடர்ந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதுபோல், ஆனந்தாச்சா சிதா (மகிழ்ச்சி ரேஷன்) திட்டமும் நிறுத்தப்பட மாட்டாது. இந்த திட்டத்தில் சப்ளை செய்யும் சில வர்த்தகர்களுக்கு பணம் வழங்க வேண்டியது நிலுவையில் உள்ளது. அதனை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும். மக்கள் நலத் திட்டங்கள் ஒரு போதும் நிறுத்தப்பட மாட்டாது’ என்று அஜித்பவார் கூறியிருந்தார்.

இந்நிலையில் தங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி சிவபோஜன் மைய உரிமையாளர்கள் சங்கம், முதல்வர் பட்நவிசுக்கு கடிதம் எழுதியது. அதே நேரத்தில் ஏழைகளின் நலன் கருதி இந்த திட்டத்தை நிறுத்தக் கூடாது என உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் சகன் புஜ்பாலும் முதல்வர் பட்நவிசிடம் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட மாநில அரசு, இத்திட்டத்திற்காக தற்போது ரூ.21 கோடி நிதி விடுவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அரசிதழில், ‘சிவபோஜன் உணவு திட்டத்திற்காக 2025-26ம் நிதியாண்டில் ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் ரூ.21 கோடி தற்போது விடுவிக்கப்பட்டுள்ள்து. இந்த பணம் உரிய நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அதனை வேறு திட்டங்களுக்கு மாற்றக் கூடாது. நிதி பெறப்பட்ட 10 நாட்களுக்குள் அதை செலவிட வேண்டும். இல்லையெனில் மானியம் திரும்பப் பெறப்படும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவபோஜன் உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் விலை ரூ.50 நடக்கின்றன. சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலங்கள் பெரிய அளவில் நடைபெறும். இதுபோல் கட்சி பேரணி, கூட்டத்துக்கும் ஏராளமானோர் வருவார்கள். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளோம். மும்பை காவல் துறையில் 16,500க்கும் மேற்பட்ட கான்ஸ்டபிள்கள் மற்றும் 2,900 அதிகாரிகள் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் தவிர, சிறப்புப் பிரிவினரும் பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்த ஆண்டு தசரா மற்றும் காந்தி ஜெயந்தி ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன.

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் சிவசேனா, தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் ஆண்டுதோறும் தசரா பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தாலும், மழை காரணமாக கோரேகாவில் உள்ள நெஸ்கோ மையத்தில் பேரணி நடைபெறும் என கடைசி நேர மாற்றத்தை நேற்று முன்தினம் அறிவித்தது. ஆனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மத்திய மும்பையின் தாதர் சிவாஜி பார்க்கில் நடத்த உள்ளது.

இந்த அரசியல் பேரணிகள் மற்றும் துர்கா சிலை கரைப்பு ஊர்வலங்களைக் கருத்தில் கொண்டு, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கவும் காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 7 கூடுதல் காவல் ஆணையர்கள், 26 துணை ஆணையர்கள், 52 உதவி ஆணையர்கள், 2,890 அதிகாரிகள் மற்றும் 16,552 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர, மாநில ரிசர்வ் போலீசார், விரைவு அதிரடிப்படையினர், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையினர், மோப்பநாய் பிரிவு, கலவரக் கட்டுப்பாடு அமைப்பினர் மற்றும் ஹோம்கார்டு வீரர்களும் நிலைமையைக் கண்காணிக்கவும் சீர்படுத்தவும் களத்தில் இருப்பார்கள். நெரிசலைத் தவிர்க்கவும், நிகழ்வுகள் அமைதியாக நடப்பதை உறுதி செய்யவும், நெரிசல் மிகுந்த பகுதிகளில் உரிய பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர மும்பை போக்குவரத்து காவல்துறை பேரணிகள் மற்றும் ஊர்வலங்களைக் கருத்தில் கொண்டு மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்க அறிவுறுத்தியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், பேரணி ஏற்பாடுகளை கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தங்கள் பலத்தை நிரூபிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. அதேநேரத்தில், ராஜ்தாக்கரே உத்தவ் தாக்கரேயுடன் இணைந்ததால், உத்தவ் தலைமையிலான கூட்டத்தில் கூட்டம் அதிகமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.