சென்னை: மாநில கல்விக் கொள்கையை இன்று(ஆகஸ்ட் 08) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். மாநில கல்விக் கொள்கை உருவாக்க 2022ல் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி முருகேசன் குழு தயாரித்த மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2024-ஜூலையில் சமர்ப்பித்தது.14 பேர் கொண்ட குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. பள்ளி, உயர்கல்விக்கு என்று தனித்தனியாக மாநில கல்வி கொள்கைகளை முதல்வர் வெளியிடுகிறார். 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
+
Advertisement