புதுடெல்லி: பீகார் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீரில் உள்ள புட்காம் மற்றும் நக்ரோட்டா, ராஜஸ்தானில் உள்ள அன்டா, மிசோரமில் உள்ள டம்பா, ஜார்க்கண்டில் உள்ள காட்ஷிலா, தெலங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸ், ஒடிசாவில் நுவாபடா மற்றும் பஞ்சாபில் உள்ள டர்ன் தரன் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்குகளும் நாளை மறுதினம் நவ.14ஆம் தேதி எண்ணப்படும். இந்த தேர்தலின் போது ஒடிசாவில், வாக்களிப்பு ரகசியத்தை பராமரிக்கத் தவறியதற்காக இரண்டு தேர்தல் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
+
Advertisement
