தேர்தல் நடைபெறவுள்ள மாநில பார் கவுன்சில்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தேர்தல் நடைபெறவுள்ள மாநில பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யக்கோரி வழக்கறிஞர் எம்பி யோகமயா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த்,நீதிபதி ஜோய்மால்யா பக்ஷி மாலிய ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், தேர்தல் நடைபெறவுள்ள மாநில பார் கவுன்சில்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற மாநில பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பதிலாக நடப்பாண்டில் 20% சதவீதம் இடஒதுக்கீட்டு இடங்களை தேர்தல் நடத்தியும் 10% சதவீத இடங்களை தேர்வு செய்தும் நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மாநில பார் கவுன்சிலில் உள்ள பதவிகளுக்கு பெண் வழக்கறிஞர்களின் பிரதிநிதித்துவம் 30% சதவீதம் என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது.


