Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதி கொடுக்க ஏற்பாடு

*505 மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம்

பொன்னமராவதி : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களிடம் 505 மனுக்கள் பெறப்பட்டு கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு புதுக்கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சடையப்பன் தலைமை வகித்தார். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சாந்தா வரவேற்றார். முகாமை திமுக தெற்கு ஒன்றியச்செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த சிறப்புமுகாமில் ஊரக வளர்ச்சித்துறையுடன், வருவாய்த்துறை,மின்துறை, கூட்டுறவுத்துறை, வங்கித்துறை, வழங்கல்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை,தகவல்தொழில்நுட்பத்துறை,சிறு,குறு தொழில்கள், திறன்மேம்பாட்டுத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறையின் சார்பில் இந்த சிறப்பு முகாமில் பங்கு பெற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இதில் கொன்னைப்பட்டி, செம்பூதி,தேனூர், கொப்பனாபட்டி ஆகிய நான்கு ஊராட்சிப் பகுதிகளைச்சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை அடங்கிய 505 மனுக்களை வழங்கினர். இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு அதிக அளவாக 191 மனு பெறப்பட்டது.129 பேரூக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி ஏற்பாட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக மனுக்கள் எழுதி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முகாமில் சமூகப்பாதுகாப்பு திட்ட தாசில்தார் பழனிச்சாமி, வட்டவழங்கல் அலுவலர் திலகா, துணைஆணையர் சுமதி,வருவாய்ஆய்வாளர் சுரேஷ்குமார், தனி வருவாய்ஆய்வாளர் பாண்டி கிராமநிர்வாக அலுவலர்கள் சௌந்தரபாண்டி, சண்முகம், பாண்டியன், பழனிச்சாமி, முருகேசன், பச்சையப்பன்,விஜயா ஊராட்சி செயலாளரகள்; ஆண்டியப்பன், பஞ்சவர்ணம், வெங்கடேஸ்வரி, திமுக ஒன்றிய துணைச்செயலாளர்கள் பாண்டியன், முருகேசன், சுரேஷ்பாண்டியன், முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் மாணிக்கம்,கிரிதரன்,கண்ணன், திமுக நிர்வாகிகள் விஜயன், ஆலவயல்முரளிசுப்பையா, பழனிவேல், தேனூர் சின்னையா, சுந்தரிராமையா, மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கொன்னைப்பட்டி ஊராட்சி திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.