ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3131 இடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வின் பெயர்: ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு - 2025 (Combined Higher Secondary Level Exam- 2025). மொத்த காலியிடங்கள்: 3131.
1. ேலாயர் டிவிசன் கிளார்க்/ஜூனியர் செக்ரட்டேரியட் அசிஸ்டென்ட். சம்பளம்: ரூ.19,900-63,200. வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு-ஏ). சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு- ஏ பணிக்கு மட்டும் கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு சலுகை: விண்ணப்பதாரரின் வயது வரம்பு 1.1.2026 தேதிப்படி நிர்ணயிக்கப்படும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். விவாகரத்து பெற்ற எஸ்சி/எஸ்டி யினருக்கு 45 வயது வரையிலும், இதர பிரிவினருக்கு 35 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும்.
ஸ்டாப் செலக்சன் கமிஷனால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த மேல்நிலை தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தத் தேர்வு ஆன்லைனில் இரு கட்டங்களாக நடைபெறும்.
முதற்கட்ட தேர்வு செப்.8 மற்றும் செப்.18ம் தேதி ஆகிய நாட்களில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலூர், நெல்லை ஆகிய மையங்களில் நடைபெறும். இத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 2ம் கட்டத் தேர்வு பிப். 2026ல் நடைபெறும்.
எழுத்துத் தேர்வில் ஆங்கில அறிவு, பொது நுண்ணறிவு, குவாண்டிடெட்டிவ் அப்டிடியூட், பொது அறிவு ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், உடற்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவத்தகுதி, டைப்பிங் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
இதர தகுதிகள்: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்களுக்கு கட்டணம் கிடையாது.www.ssc.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.07.2025.