Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 14,582 இடங்கள் : ஸ்டாப் செலக்‌ஷன் தேர்வு அறிவிப்பு

தேர்வு: SSC- Combined Graduate Level Exam-2025.

காலியிடம் ஏற்பட்டுள்ள பணிகள்: ஜூனியர் ஸ்டேடிஸ்டிக்கல் ஆபீசர்/இன்ஸ்பெக்டர்ஸ்/சப்-இன்ஸ்பெக்டர்/அசிஸ்டென்ட் செலக்‌ஷன் ஆபீசர்/ஆடிட்டர்/அக்கவுன்டென்ட்/டேக்ஸ் அசிஸ்டென்ட்/போஸ்டல் அசிஸ்டென்ட்/சார்ட்டிங் அசிஸ்டென்ட்/அப்பர் டிவிசன் கிளார்க்/ ரிசர்ச் அசிஸ்டென்ட்/எக்சிக்யூட்டிவ் அசிஸ்டென்ட்/ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (கூடுதல் பணி விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது).

சம்பள விகிதம்:

1. அசிஸ்டென்ட் செலக்‌ஷன் ஆபீசர்/இன்ஸ்பெக்டர்/சப்-இன்ஸ்பெக்டர் ரூ.44,900- 1,42,400.

2. ரிசர்ச் அசிஸ்டென்ட்/ஜூனியர் ஸ்டேடிஸ்டிக்கல் ஆபீசர் ரூ.35,400- 1,12,400.

3. ஆடிட்டர்/அக்கவுன்டென்ட்: ரூ.29,200-92,300.

4. போஸ்டல் அசிஸ்டென்ட்/அப்பர் டிவிசன் கிளார்க்/டேக்ஸ் அசிஸ்டென்ட்/சார்ட்டிங் அசிஸ்டென்ட்: ரூ.25,500-81,100.

கல்வித்தகுதி:

1. ஜூனியர் ஸ்டேடிஸ்டிக்கல் ஆபீசர்: புள்ளியியல் பாடத்தில் பிஎஸ்சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. ஸ்டேடிஸ்டிக்கல் இன்வஸ்டிகேட்டர் கிரேடு-2: புள்ளியியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. இதர பணிகளுக்கு: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அசிஸ்டென்ட் செலக்‌ஷன் ஆபீசர் பணிக்கு 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அசிஸ்டென்ட் பணிகளுக்கு 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். இன்ஸ்பெக்டர்/சப்-இன்ஸ்பெக்டர்/ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் பணிகளுக்கு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். இதர அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு 1.8.2025 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசின் விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷனால் நடத்தப்படும் 3 கட்ட ஆன்லைன் தேர்வு, கணினி திறனறிவு தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்பின்னர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும். முதல் 3 கட்ட தேர்வுக்கான பாடங்கள், மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

உடற்தகுதி மற்றும் உடல் திறன் தகுதி விவரம்: (இன்ஸ்பெக்டர்/எஸ்ஐ (சிபிஐ): ஆண்கள்: குறைந்தபட்சம் 157.5 செ.மீ, உயரம் இருக்க வேண்டும். (எஸ்டியினருக்கு 152.5 செ.மீ). மார்பளவு 81 செ.மீ., 5 செ.மீ சுருங்கி, விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். 15 நிமிடங்களில் 1600 மீட்டர் ஓடும் திறன் மற்றும் 30 நிமிடங்களில் 8 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள்: குறைந்தபட்ச உயரம்- 152 செ.மீ., உடல் எடை 48 கிலோ இருக்க வேண்டும். எஸ்டி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உயரத்தில் 2.5 செ.மீ., சலுகை தரப்படும். உடல் எடை 46 கிலோ இருந்தால் போதும். 20 நிமிடங்களில் ஒரு கி.மீ நடக்கும் திறன், 25 நிமிடங்களில் 3 கி.மீ., சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சப்-இன்ஸ்பெக்டர் (சிபிஐ) பணிக்கான உடற்தகுதி:

ஆண்கள்- உயரம் 165 செ.மீ., மார்பளவு-76 செ.மீ., (விரிவடைந்த நிலையி்ல்).

பெண்கள்: உயரம்- 150 செ.மீ., உயரத்தில் எஸ்டி யினருக்கு 5 செ.மீ., சலுகை வழங்கப்படும்.

சப்-இன்ஸ்பெக்டர் (என்ஐஏ):

ஆண்கள்- உயரம்- 170 செ.மீ., (எஸ்டி யினருக்கு 165 செ.மீ). மார்பளவு-76 செ.மீ (விரிவடைந்த நிலையில்). பெண்கள்- உயரம் 150 செ.மீ., இருக்க வேண்டும்.

ஜூனியர் இன்டிஜென்ஸ் ஆபீசர் (என்சிபி): ஆண்கள்- உயரம்-165 செ.மீ., உயரமும், பெண்கள் 152 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.07.2025.