டெல்லி: எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குழுமம் குத்தகை பாக்கியில் ரூ.20 கோடியை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. திருச்சியில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம். குழுமம் நடத்திய ஹோட்டலின் குத்தகை முடிந்ததால், அதனை கையகப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக அந்நிறுவனம் முறையீடு செய்தது. குத்தகை பாக்கி ரூ.38 கோடியில் ரூ.20 கோடியை உடனே செலுத்தினால்தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
+
Advertisement