வேதாரண்யம்: நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த சந்திரபாபு என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் ஆகிய 6 பேர் கடந்த 5ம்தேதி மதியம் மீன் பிடிக்க சென்றனர்.
கோடியக்கரை கிழக்கே இரவு 8 மணியளவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது 2 படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர் 8 பேர் வந்து இரும்பு கம்பி, கட்டை, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் மீனவர்களை தாக்கி மீன்படி உபகரணங்களை பறித்து சென்றனர்.இதேபோல் நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த சசிக்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சென்ற 5 மீனவர்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர், பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவர்களிடமிருந்து மீன்படி உபகரணங்களை பறித்து சென்றனர்.இதில் படுகாயமடைந்த 11 பேரும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது ெதாடர்பாக இலங்கையை சேர்ந்த 8 கடற்கொள்ளையர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.