இலங்கை: இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே நேற்று வீசிய கடைசி ஓவரில் ஆப்கன் வீரர் முகமது நபி தொடர்ச்சியாக 5 சிக்சர் விளாசினார். இந்த போட்டியை இலங்கையில் டிவியில் பார்த்துக்கொண்டிருந்த வெல்லாலகேவின் தந்தை சுரங்கா, மகனின் பந்துவீச்சை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதுபற்றி நேற்று போட்டி முடிந்ததும் வெல்லாலகேவிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை கேட்டு வெல்லாலகே கண்ணீர் சிந்தினார். அவருக்கு சக வீரர்கள் ஆறுதல் கூறினர். தொடர்ந்து தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவர் கொழும்பு திரும்பினார். இதனால் நாளை வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க முடியாது.