கொழும்பு: முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை ஆனார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னே மற்றும் முன்னாள் எம்பி அதுரலியே ரதானா ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த சேனரத்னே நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அதை தொடர்ந்து செப்டம்பர் 9ம் தேதி வரை அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புத்த துறவி கடத்தல் வழக்கில் அதுரலியே ரதானா கைது செய்யப்பட்டுள்ளார்.