Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கை சிறையில் இருக்கும் 7 மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 7 பேருக்கு இலங்கை நீதிமன்றம் 2வது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஈசாக் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த ஜூலை 13ம் தேதி ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகிய 7 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 7 பேரையும் கைது செய்தனர்.

மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 7 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் 3ம் தேதி வரை நான்காவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 7 மீனவர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.