கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிக்காலத்தில் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் நேற்று முன்தினம் அவரை சிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரை 26ம் தேதி வரை காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் விக்ரமசிங்கேவிற்கு ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவு அதிகமாக இருந்தது. இதனை தொடர்ந்து அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.