நாக்பூர்: ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் நாக்பூரில் வருடாந்திர விஜயதசமி பேரணி நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தனது உரையில் கூறியதாவது:
நமது அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், சமீபத்தில் நேபாளத்தில் பொதுமக்களின் கோபத்தின் காரணமாக வன்முறை ஏற்பட்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது கவலை அளிக்கிறது. இத்தகைய குழப்பங்களை உருவாக்க விரும்பும் சக்திகள் நம் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தேசபக்த இயக்கம் ஆர்எஸ்எஸ்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் விடுத்த அறிக்கையில், ‘ மாறாத தேசபக்தி, அயராத உழைப்பு, மனப்பூர்வமான ஈடுபாடு, எல்லோரையும் இணைக்க வேண்டும் என்கின்ற பேரன்பு இத்தகைய மகத்தான மனப்பான்மையால் தான் ஆர்எஸ்எஸ் இவ்வளவு பெரிய சிறந்த இயக்கமாக உருவெடுத்து இருக்கின்றது ’ என கூறி உள்ளார்.