வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 99 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
பல்லேகலே: வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இதில் முதல் போட்டியில் இலங்கையும், 2வது போட்டியில் வங்கதேசமும் வென்ற நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பல்லேகலேவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன் எடுத்தது.அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 124, கேப்டன் சரித் அசலங்கா 58 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணியில் டோஹித் ஹிரிடோய் 51, கேப்டன் மெஹிடி ஹசன் மிராஸ்,
ஹொசைன் எமோன் தலா 28 ரன் அடிக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 39.4ஓவரில் 186ரன்னுக்கு வங்கதேசம் ஆல்அவுட் ஆக 99 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்று 2-1 என தொடரை கைப்பற்றியது. குசால் மெண்டிஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார். சொந்த மண்ணில் இலங்கை தொடர்ச்சியாக 8வது ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ளது. அடுத்ததாக 3 டி.20போட்டிகளில் முதல் ஆட்டம் நாளை நடக்கிறது.


