Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கை அதிபர் தேர்தல் ராஜபக்சே கட்சியில் பிளவு: மகனை வேட்பாளராக நிறுத்தியதால் எதிர்ப்பு, 100 எம்பிக்கள் தனிக்கட்சி தொடங்க முடிவு

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் செப்.21ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குகிறார். அவருக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகவும், ராஜபக்சேவின் இளையமகன் நமல் ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ராஜபக்சே கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கட்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் 145 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் தற்போதைய அதிபர் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது நமல் ராஜபக்சே அதிபர் தேர்தலில் வேட்பாளராக உள்ளதால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசி மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நேற்று மத்திய கண்டி மாவட்டத்தில் எம்பிக்கள் கூட்டம் நடந்தது. அதில் ராஜபக்சே கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து விலகி அடுத்த வாரம் தனிக்கட்சி தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.